பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
11/ ’15 கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படுகின்ற கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடற்கொள்ளைகளைத் தடுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் போன்ற சேவைகள் 2012 செத்தெம்பர் 18 ஆம் திகதி தொடக்கம் எவன்காட் கம்பனிக்கு கையளிக்கப் பட்டுள்ளமையினை அவர் அறிவாரா? (ஆ) இலங்கை கடற்படைக்கும் எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்திற்கும் இடையே காணப்படும் உடன்படிக்கை யாதென்பதையும் அதன் பிரதான நிபந்தனைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) எவன் கார்ட்டுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் காணப்படும் சேவை உறவு யாதென்பதையும்; (ii) எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்புச் சேவைப் பணிகளில் கடற்படையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்படுகின்றதா என்பதையும்; (iii) ஆமெனின், அது எந்த அடிப்படையில் என்பதையும்; அவர் குறிப்பிடுவாரா? (ஈ) 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, (i) எவன்கார்ட் நிறுவனம் ஈட்டிய வருமானம்; (ii) இவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்திய வரித்தொகை; என்பவற்றை தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா? (உ) பெருமளவு இலாபத்தை ஈட்டுகின்ற கடல் பாதுகாப்பு பணியை கடற் படையிலிருந்து நீக்குவதற்கும் அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்கொண்ட தீர்மானத்தை திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-09
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks