E   |   සි   |  

 திகதி: 2015-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0010/2015: The owners of the houses belonging to Ocean View Development

10/ '15

 

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) அப்போதைய நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சுடன் இணைப்புச் செய்யப்பட்டிருந்த ஓஷன் வீவ் டிவளொப்மன்ட் (பிரைவெட்) லிமிட்டெட் கம்பனியால் நிர்மாணிக்கப்பட்ட மத்தேகொடை மற்றும் கஹதுடுவை வீடமைப்புத் தொகுதிகளில் சில வீடுகளை நபர்களுக்கு வழங்கும் போது, ரூபா. 60 மில்லியனுக்கு அதிகமான தொகை முறைகேடான விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமையினை அவர் அறிவாரா?

(ஆ) (i) ஒவ்வொரு வீட்டுத் தொகுதியினையும் விற்பனை செய்வதற்கு தீர்மானித்த தொகை யாதென்பதையும்;

(ii) இதற்காக இலகுக் கொடுப்பனவு முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்ததா என்பதையும்;

(iii) ஆமெனில், ஒவ்வொரு வகையான வீட்டுக்கும் செலுத்த வேண்டிய முதலாவது தவணைத் தொகை மற்றும் ஏனைய தவணைத் தொகைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) கஹதுடுவை வீடமைப்புத் தொகுதியில் B –5, B4 –10, B3 –35, B2 –36 மற்றும் மத்தேகொடை வீடமைப்புத் தொகுதியில் D –16, B - 10 ஆகிய இலக்க வீடுகள் வழங்கப்பட்டுள்ள ஆட்கள் யார்;

(ii) மேற்படி வீடுகளைப் பெற்றுக் கொண்ட ஆட்களுக்கும் முன்னாள் விடயப் பொறுப்பு அமைச்சருக்கும் இடையிலான உறவு யாது;

(iii) குறிப்பிட்ட ஆட்கள் மேற்படி வீடுகளுக்கு செலுத்தியுள்ள பணத் தொகை மற்றும் அவர்களிடமிருந்து தொடர்ந்தும் அறவிடப்பட வேண்டியுள்ள மீதிப் பணத்தொகை யாது;

(iv) குறித்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(v) மேற்படி வீடுகளை விநியோகிக்கையில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக புலனாய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதா;

(vi) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks