E   |   සි   |  

 திகதி: 2016-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0009/2016: Floating Armory in Galle Harbor

9/ '15

 

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    2015.08.18 ஆம் திகதி காலி துறைமுகப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'மஹநுவர' எனும் கப்பலினுள்ளும் இலங்கை தென்னக கப்பல் வளாகத்தினுள்ளும் மற்றும் அதன் சேவா வனிதா அலகுக்குச் சொந்தமான கட்டடத்தினுள்ளும் ஆயுதங்கள் மற்றும் ரவைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமையினை அவர் அறிவாரா?

(ஆ) (i) பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ரவைகளின் சட்ட ரீதியான உரிமையை எவரேனும் நபர் ஒருவர் அல்லது நிறுவனம் ஒன்று கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி ஆயுதங்கள் எவரேனுமொரு ஆளுக்கு அல்லது ஏதேனுமொரு நிறுவனத்திற்கு எச்சட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்டிருந்தன என்பதையும்;

(iii) ஆமெனில், இதற்கு அதிகாரம் வழங்கிய அதிகாரி யார் என்பதையும்;

(iv) மேற்படி ஆயுதங்களை உற்பத்தி செய்த நாடு, ஆண்டு மற்றும் பெற்றுக் கொண்டுள்ள உரிமப்பத்திரம் ஆகியவை யாவை என்பதையும்;

(v) ஆயுதங்கள் எந்த வழிமுறையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை துறைமுக வளாகத்தில் பேணிச் செல்வதற்கு அனுமதியுள்ளதா;

(ii) இதற்கான அனுமதியை வழங்கியுள்ள அதிகாரி யார்;

(iii) இதன் சார்பில் அவென்கார்ட் நிறுவனம் ஏதேனும் பணத்தொகையை செலுத்துகின்றதா;

(iv) ஆமெனில், அப்பணத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) (i) மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபர் வழங்கியுள்ள முடிவுகளை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீர் ஏற்றுக்கொள்வீரா;

(ii) இது தொடர்பில் பாராளுமன்றக் குழுவொன்றை  நியமிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-03-08

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks