பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
8/ '15
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) அப்போதைய நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சுக்கும் அந்த அமைச்சின் கீழ் காணப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் 2015 ஆம் ஆண்டுக்காக தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகளை அச்சிடுவதற்கென ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் பணம் சேகரிக்கப்பட்டு ஓஷன் வீவ் டிவளொப்மன்ட் (பிரைவெட்) லிமிட்டெட்டிற்கு ரூபா 14,800,800/= தொகை செலுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென்பதை அறிவாரா?
(ஆ) அவ்வாறு நிதி சேகரிக்கப்பட்டிருப்பின், அப் பணத்தொகை எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) குறித்த தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகளை அச்சிடுவதற்காக விலை மனுக்கள் கோரப்பட்டு நிறுவனம் ஒன்று தொிவுசெய்யப்பட்டிருப்பின் அது எவ்வாறு இடம்பெற்றது என்பதையும்;
(ii) கொள்வனவுக் கட்டளை கொடுக்கப்பட்ட மற்றும் அச்சிடல் நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) அச்சிடல் நிறுவனத்திற்கு எந்த நிறுவனத்தினால் பணம் செலுத்தப்பட்டது என்பதையும்;
(iv) அப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) (i) அமைச்சு அல்லாத வேறு நிறுவனமொன்று இதற்கு பணம் செலுத்தியிருப்பின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகள் அச்சிடப்படல் தொடர்பாக நிதி மோசடிகள் பற்றிய புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதன் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-20
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks