E   |   සි   |  

 திகதி: 2015-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0007/2015: Land belonging to Ms. Chinnathamby donated to University of Colombo

7/ '15

 

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு 07, ஹேவா ஒழுங்கையில், 11 ஆம் இலக்க இடத்தில் அமைந்துள்ள, மருத்துவர் (செல்வி) சிவா சின்னத்தம்பிக்கு சொந்தமாக இருந்ததும் அவரது மரண சாசனம் மூலம் கொழும்பு பல்கலைக்கழக மகளிர் விடுதியொன்றிற்காக நன்கொடையாக வழங்கப்பட்டதும் அவருடைய மரணத்தை தொடர்ந்து குமாராஜ் சித்ரஞ்சன் நடராஜா என்பவரால் அனுபவிக்கப்பட்டு வந்ததுமான ஆதனம் சட்ட விரோதமான முறையில் வலுக்கட்டாயமாகவும் மோசடியாகவும் கைப்பற்றப்பட்டு அனுபவிக்கப்படுவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆதனம் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஆதனமாக சுவீகரிக்கப்பட்டதா என்பதையும்;

(iii) அதற்கேற்புடையதான மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கப்பட்ட செலவுகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி இல்லத்தில் மகளிர் விடுதியொன்றை ஆரம்பிக்காது ஆடம்பர உணவகமொன்று ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படை யாதென்பதையும்;

(v) அது யாரால் கொண்டு நடாத்தப்படுகின்றதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நீதிமன்ற உத்தரவின் பேரில் முத்திரையிடப்பட்டிருந்த இந்த இல்லத்தை நீதிமன்ற அனுமதியின்றி திறந்து அங்கிருந்த தளபாடங்கள் உள்ளிட்ட சகல பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டமை தொடர்பாக புலனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-20

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks