பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0137/2010: Unsettlled IDD bills of SL Army

0137/ ‘10

கெளரவ அருந்திக்க பர்னாந்து,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)  2002 ஆம் ஆண்டளவில், யாழ்ப்பாண இராணுவ தலைமையகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்காக ரூபா. 2,018,331.00 நிலுவைப்பணத் தொகையொன்று ஸ்ரீ லங்கா ரெலிகொம் கம்பனிக்கு செலுத்தவேண்டி இருந்தது என்பதை அவா் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) மேற்படி கட்டணப்பட்டியல்கள் தீர்க்கப்படாமை தொடர்பாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் கம்பனி சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தது என்பதை அவர் அறிவாரா?

(இ) (i) தற்போது, மேற்படி நிலுவைப்பணத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், எந்த நிதியத்திலிருந்து என்பதையும்,

(iii) அதற்கான அனுமதியினை வழங்கியவரின் பெயர் யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-03

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks