logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0135/2010: Importation of Weapons

0135/ ‘10

 

கெளரவ அருந்திக்க பர்னாந்து,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை இராணுவத்திற்கு, அமெரிக்காவில் டெக்சாஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரிடீஷ் போர்னியோ டிபென்ஸ் கம்பனியினூடாக, ஆயுதங்கள் அல்லது வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்,

(ii) அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருப்பின் அதற்காக ஏற்கப்பட்டுள்ள செலவு ஒவ்வோர் ஆண்டிலும் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்,

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) அக்கம்பனி உரிமையாளர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவை என்பதையும்,

(ii) மேற்படி உரிமையாளர்களுக்கும் இலங்கை இராணுவத்தின் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும்,

(iii) அவ்வாறாயின், அத்தகைய தொடர்புள்ளவர்களின் பெயர்கள யாவை என்பதையும்,

(iv) குறிப்பிட்ட கம்பனியுடன் அத்தகைய ஓர் தொடர்பு காணப்படுமாயின், அது குறித்து எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-03

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks