04

E   |   සි   |  

 திகதி: 2014-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

4953/2014: Thopputhota-Mahawewa Road Wennappuwa

4953/ ’14

கௌரவ நிரோஷன் பெரேரா,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதியில் தோப்புதொட்டவில் இருந்து தங்கொட்டுவ – நாத்தாண்டி ஊடாக மஹவெவ வரையிலான வீதியின் நீளம் எவ்வளவு;

(ii) அவ்வீதியை நிர்மாணித்தல் மற்றும் புனரமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தப் பணத்தொகை யாது;

(iii) அவ்வீதியின் நிர்மாணிப்பினை மேற்கொள்கின்ற கம்பனி யாது;

(iv) அக்கம்பனிக்கு நிர்மாணிப்பினை ஒப்படைக்கின்றபோது முறைசார்ந்த கேள்விப்பத்திர நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இந்த வீதியின் நிர்மாணிப்பு ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;

(ii) இந்த வீதியின் நிர்மாணிப்பை பூர்த்தி செய்வதற்கு இலக்கிடப்பட்ட திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2014-08-07

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks