பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4952/ ’14
கௌரவ நிரோஷன் பெரேரா,— பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) புத்தளம் மாவட்டத்தின் மஹவெவவில் இருந்து கட்டுநேரிய வரையான கடற் பிரதேசத்தில் கரையோரம் தீவிர கடலரிப்புக்குள்ளாகி வருகின்றமையை அறிவாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி பிரதேசத்தில் கடலரிப்பைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;
(ii) அந்நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும்கூட கடலரிப்பினைத் தடுக்க இயலாமல் போயுள்ளதா;
(iii) ஆமெனில், ஏன்
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேலே குறிப்பிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கடலரிப்பினால் அழிவடைந்துள்ள மற்றும் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ள வீடுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு;
(ii) அழிவடைந்துள்ள வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு நட்டஈடு செலுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;
(iii) அந்நட்டஈட்டுத் தொகையை மதிப்பிடுகின்ற முறையியல் யாது;
(iv) கடலரிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் பொது வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-06
கேட்டவர்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks