04

E   |   සි   |  

 திகதி: 2010-06-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

0120/2010: Medicine Deficit

0120/ ’10 1. கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (3) (அ) இலங்கையில் மருந்துப் பற்றாக்குறையொன்று தோன்றியுள்ளதாக 2010, மே மாதத்தில் வெளிவந்த ஊடக அறிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) மேற்படி மருந்துப் பற்றாக்குறைக்கான காரணங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா? (இ) மருந்து போன்ற அத்தியவசியப் பொருட்கள் போதியளவு களஞ்சியசாலைகளில் இருக்க வேண்டுமென்பதை அவர் ஏற்றுக் கொள்கின்றாரா? (ஈ) (i) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மருந்து வகைகளின் அளவு எவ்வளவென்பதையும், (ii) இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளின் அளவு எவ்வளவென்பதையும், (iii) அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அடைந்துள்ள நட்டம் அல்லது பெற்றுள்ள கடனின் அளவு எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-06-30

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks