logo

பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2010-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0118/2010: Health Facilities in Digamadulla

0118/ ’10

கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,—  சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      திகாமடுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கின்ற இஸ்மாயில்புரம் கிராமத்தில் சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் அங்குவாழ் மக்கள் பல அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர் என்பதையும், 

           (ii)    அம்மக்கள் அவசர வைத்திய சிகிச்சைகளுக்காக அம்பாறை, சம்மாந்துறை போன்ற தூர இடங்களுக்கு செல்ல ஏற்பட்டுள்ளது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) நாட்டின்  அனைத்துப் பிரதேசங்களிலும் குறைந்தது ஒரு கிராம வைத்திய நிலையமாவது இருக்கின்ற நிலையில் இந்த இஸ்மாயில்புரம் கிராமத்திற்கு அவ்வாறானதோர் வசதியையாவது விரைவில் பெற்றுக்கொடுக்க அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-03

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks