04

E   |   සි   |  

 திகதி: 2010-06-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0107/2010: UN Country Report

0107/ ‘10

 

கெளரவ ராஜீவ விஜேசிங்க,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    ஐ.நா வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின்  பணிப்புரையின்பேரில், கண்ட்ரி ஒப் ஒரிஜின் ரிசேர்ச் அண்ட் இன்போமேசன் எனும் நிறுவனத்தினால், 2010 ஏப்ரல் மாதத்தில்  இலங்கை  பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) இலங்கைச் சிறைச்சாலைகள் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் சரியானவையா என்பதையும்,

(ii) இலங்கைச் சிறைச்சாலைகளின் நிலைமைகளை முன்னேற்றுவதற்காக சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான எந்தவொரு அமைச்சினாலும் கடந்த இருபது வருடங்களாகத் தயாரிக்கப்பட்ட விதப்புரைகளையும்,

(iii) அத்தகைய விதப்புரைகள் அமுல்படுத்தப்பட்டனவா என்பதையும்,

(iv) இல்லையெனின், அத்தகைய எந்த விதப்புரைகளும் விரைவாக அமுல்படுத்தப் படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதோடு, அதுபற்றி பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறியத் தருவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-10

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks