logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0106/2010: Ehaliyagoda Educational Zone

0106/ ‘10

கௌரவ ராஜீவ விஜேசிங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     எகலியகொட கல்வி வலயத்தில் 100 க்கும் குறைவான பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளின் எண்ணிக்கையையும்,

           (ii)    அந்த  ஒவ்வொரு பாடசாலையினதும் 2008, 2009 ஆம் ஆண்டுகளுக்கான சாதாரண தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் பெறுபேறுகளையும்,

(iii) அப்பாடசலைகள் போதிய ஆசிரியர்களைக் கொண்டிருக்கின்றனவா என்பதையும்,

(iv) அத்தகைய பாடசாலைகளில் ஆசிரியர்கள்  சமுகமளித்திராத போது மாணவர் களை பயனுள்ள வகையில் ஈடுபடுத்தி வைத்திருப்பதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகளையும்

அவர் இச்சபைக்குத் தொரிவிப்பாரா?

(ஆ) எகலிகொட கல்வி வலயத்தில்,

(i) போதிய ஆசிரியர்களைக் கொண்டிராத பெரிய பாடசாலைகளின் எண்ணிக்கையையும்,

(ii) விஞ்ஞானம் அல்லது கணிதம் அல்லது ஆங்கிலத்திற்கு போதிய ஆசிரியர் களைக் கொண்டிராத பெரிய பாடசாலைகளின் எண்ணிக்கையையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) கிராமிய மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் பாடசாலைகளதும், கற்பித்தல்  ஆளணியினதும் நியாயபூர்வமான பங்கீட்டினை உறுதிப்படுத்த, மாகாண கல்வி அமைச்சுகளுக்கான வழிகாட்டு நெறிகளை வகுப்பாரா என்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-06-09

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks