04

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0052/2010: UN Country Report

0052/ ‘10

கெளரவ ராஜீவ விஜேசிங்ஹ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரால் (UNHCR) பொறுப்பளிக்கப்பட்டதும், 2010 ஏப்ரல் மாதத்தில் “கன்ட்றி ஒப் ஒறிஜின் றிசேர்ச் அன்ட் இன்போமேஷன்” (CORI) எனும் பெயர் கொண்ட அமைப்பொன்றினால் தயாரிக்கப்பட்டதுமான இலங்கை பற்றிய பிரதேச அறிக்கையொன்று பற்றி அவர் அறிவாரா?

(ஆ) (i) ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அவ்வாறான பிரதேச அறிக்கைகள் குறித்தும் அவை அவற்றிற்குப் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதையும் அறிவிக்கபடுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறைகளையும்,

(ii) ஈடுபடுத்தப்படும் ஆளணியினர் மற்றும் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சி முறையியல் ஆகிய விபரங்களுடன் எவ்வாறு CORI இப்பணிக்கெனத் தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஒன்றை UNHCR இடமிருந்து அவரால் பெறமுடியுமா என்பதையும்  மற்றும்,

(iii) இச்செயற்பாட்டின் செலவையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) அறிக்கையில் தவறுகளேதுமிருப்பின் அவை திருத்தப்படுவதை உறுதிப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை அவர் எடுப்பாரா எனக் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks