பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3614/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) குக்குலேகங்க மின் உற்பத்தி நிலைய வலயத்தில் மாகெளிய பிரதேசத்தில், மண் மேடுகள் வெட்டியகற்றப்படுதல் நடைபெற்றுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மண் மேடுகளை வெட்டியகற்றுவதற்கு அனுமதியளித்தவர் யாரென்பதையும்;
(ii) மேற்படி மண் மேடுகளை வெட்டியகற்றுவதற்கான காரணம் யாதென்பதையும்;
(iii) பாலிந்தநுவர பிரதேச செயலாளர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளாரா என்பதையும்;
(iv) இவ்வாறு மண் மேடுகளை வெட்டியகற்றுபவர்கள் யாவரென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-10-24
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) குக்குலேகங்க மின் உற்பத்தி நிலைய வலயத்தில், மாகெளிய- கொஸ்குலான பிரதேசத்தில் மண் மேடுகள் வெட்டியகற்றப்படுதல் நடைபெற்றுள்ளது.
(ஆ) (i) புவிச் சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத் தினால் IML/B/HO/6013 ஆம் இலக்க 2012.05.21ஆம் திகதிய அகழ்வு உரிமப் பத்திரத் தின் மூலம் மண் வெட்டியகற்றப்படுவதற் கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
(ii) வர்த்தக நடவடிக்கைக்காக.
(iii) பாலிந்தநுவர பிரதேச செயலாளரின் விதப்புரை யின் அடிப்படையில் 2012.05.21ஆம் திகதியிடப் பட்டு வழங்கப்பட்ட அகழ்வு உரிமப்பத்திரம், இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்ததன் பின்னர் அவரது 2012.09.18ஆம் திகதிய கடிதத்தின்மூலம் விடுக்கப்பட்ட வேண்டு கோளின்படி புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தினால் 2012.09.26ஆம் திகதியிடப் பட்டு இரத்துச் செய்யப்பட்டது.
(iv) மேற்படி மண் மேடுகளை வெட்டுதல் அகலவத்தை, பிம்புர, பொதுஜன மாவத்தையி லுள்ள பீ.வி. சுனில் என்பவரால் மேற்கொள்ளப் பட்டது.
(இ) எழாது.
பதில் தேதி
2014-01-21
பதில் அளித்தார்
கௌரவ (அல்ஹாஜ்) ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks