பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3580/ ’13
கெளரவ சுஜீவ சேனசிங்க,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற சேவை நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதி 2010 ஆம் ஆண்டிலிருந்து வங்கிகளிலிடப்படவில்லை என்பதையும்;
(ii) ஊழியர் சேமலாப நிதி வங்கிகளிலிடப்படாத காரணத்தினால் 2010 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வுபெறுகின்ற இ.போ.ச. ஊழியர்களுக்கு சேமலாப நிதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மேற்படி நிறுவனத்தின் சேவை நிலையங்கள் சேமலாப நிதியாக வங்கிகளிலிடப்பட வேண்டிய மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி சேமலாப நிதியை வங்கிகளிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் திகதி யாதென்பதையும்;
(iii) குறித்த பணத் தொகை உரிய திகதியில் வங்கிகளிலிடப்படாமையினால் மிகைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-08
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කුමාර වෙල්ගම මහතා
(மாண்புமிகு குமார வெல்கம)
(The Hon. Kumara Welgama)
(අ) (i) බැංකුගත කර නොමැත.
(ii) ඔව්.
(ආ) (i) රුපියල් මිලියන 3,748යි.
(ii) මහා භාණ්ඩාගාරය මඟින් 2010 වර්ෂයේ සිට ප්රධාන කාර්යාලය, ප්රාදේශීය කාර්යාල සහ ප්රාදේශීය වැඩපලවල ආදායම් නොඉපවන ඒකකයන්හි වැටුප් ගෙවීම සඳහා දෙනු ලැබූ මුදල් රුපියල් මිලියන 3,161 නතර කිරීම නිසා එම සේවකයින්ගේ වැටුප් ද ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ අනෙකුත් ඩිපෝවන්හි ආදායම් මගින් ගෙවීම නිසා මෙම අර්ථසාධක මුදල් ගෙවීමට නොහැකි වී ඇත.
මහා භාණ්ඩාගාරය වෙත ලිඛිතව මේ මුදල් සම්බන්ධව දන්වා ඇති අතර 2014 අයවැය ඇස්තමේන්තුව පිළියෙල කිරීමේදී මෙම මුදල් මහා භාණ්ඩාගාරය මඟින් ඉල්ලුම් කොට ඇත. එලෙස මුදල් ලැබූ විගසම බැංකුගත කිරීමට කටයුතු යොදනු ඇත.
(iii) රු.මිලියන 964.4කි.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-08-08
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks