01

E   |   සි   |  

 திகதி: 2013-05-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

3435/2013: சவூதி அரேபியாவில் அநாதரவாகியுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் : நடவடிக்கை

3435/ ’13

 

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    சவூதி அரேபியாவின் ரியாதில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிவிட்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள கொம்பனித்தெருவைச் சேர்ந்த திருமதி அன்வர் சியானா வெளியிட்டுள்ள தகவல்களுக்கு அமைய அந்நாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் சுமார் 50 பேர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், அது தொடர்பாக கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) இவர்களை விடுவித்து உடனடியாக இலங்கைக்கு அழைத்துவருவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி வீட்டுப் பணிப்பெண்களை அநாதரவான நிலையில் கைவிடுவதற்குச் செயற்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் அதற்குப் பங்களிப்புச் செய்துள்ள ஏனையோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி பெண்களது குடும்பங்களின் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்றை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-21

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)       ඔව්. මෙවැනි සිද්ධියක් දේශීය මාධ්‍ය මඟින් වාර්තා කර ඇත.

(ආ)         (i)      ශ්‍රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශය මඟින් මේ පිළිබඳ මාධ්‍ය හරහා දුන් තොරතුරු අනුව කොම්පඤ්ඤවීදියේ අන්වර් ෂියානා මහත්මිය කැඳවා ඇයගෙන් වැඩිදුර තොරතුරු ලබා ගන්නා ලදී.

              (ii)      ඒ අනුව සවුදි බලධාරීන්ගේ සහාය ලබා ගෙන එම ස්ථානය වැටලීමට කටයුතු කිරීම සඳහා රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයට උපදෙස් ලබා දෙන ලදී. ඒ අනුව තානාපති කාර්යාල නිලධාරින් අදාළ ප්‍රදේශයට ගොස් දින 03ක් (2013 මාර්තු 6,7 සහ 8) එහි නැවතී ශ්‍රී ලාංකික සේවිකාවකගේ (අන්වර් ශියානා මහත්මියගේ ඥාතියකු වන නූරා අශික් ජවූෆර් මිය) සහාය ලබා ගෙන එම ස්ථානය වටලා ඇත. ඔවුන් එම ස්ථානය වටලන විට කිසිම රැඳවියෙක් එහි සිට නැත.

(ඇ) (i) එවැනි ගෘහ සේවිකාවන් කණ්ඩායමක් එහි රැඳී නොසිටි තත්ත්වයක් තුළ මෙම ප්‍රශ්නය මඟින් අසනු ලබන ගැටලුවද පැන නොනඟී.

(ii) ගරු මන්ත්‍රීතුමා කියන ආකාරයේ වෘත්තියෙහි යෙදුණු කට්ටියක් ඒ ස්ථානයෙන් හසු වුණේ නැති වුවත් සාමාන්‍යයෙන් ගෘහ සේවිකාවන් විදේශගත වුණාට පසුව විදේශගත පවුල්හි ආරක්ෂාව, සුභසාධනය හා ආර්ථිකය නංවාලීම උදෙසා කාර්යාංශය මඟින් සේවක සුභසාධන අරමුදලක් පිහිටුවා ඇති අතර විවිධ අවස්ථාවන්හිදී එම අරමුදලින් විදේශගත ශ්‍රමිකයන්ගේ පවුල්වල සාමාජිකයන් වෙත මෙන්ම ශ්‍රමිකයා වෙත ප්‍රතිදාන ලබා දෙනු ලබයි. විශේෂයෙන්ම ශ්‍රමිකයෙකු මරණයට පත් වුණොත් ලියා පදිංචි වූ කාලය තුළ නම් රුපියල් ලක්ෂ හතරක මුදලක් ලබා දෙනවා.

(ඈ)          පැන නොනඟී.

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks