பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3167/ ’12
கௌரவ ஈ. சரவணபவன்,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளதும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமானதுமான, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, கண்டி வீதி மற்றும் பிரதான வீதி ஆகிய ‘ஏ’ தரத்திலான வீதிகளின் புனரமைப்புப் பணிகள் 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை மேற்படி எந்தவொரு வீதியினதும் மேற்படி பணிகள் பூர்த்திசெய்யப்படவில்லையென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வீதிகளை புனரமைக்கும் பணிகளை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக் கம்பனி உள்நாட்டுக் கம்பனியா இன்றேல் வெளிநாட்டுக் கம்பனியா என்பதையும்;
(ii) இந்த புனர்நிர்மாணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் நிதி வெளி நாட்டுக் கடனுதவியா இன்றேல் அரசின் நிதியா என்பதையும்;
(iii) மேற்படி வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 03 வருடங்கள் கழிந்துள்ளபோதிலும், இதுவரை அந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-08
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-03-08
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks