04

E   |   සි   |  

 திகதி: 2012-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

3032/2012: "வல்லாபட்டா" மூலிகைத் தாவரம் : பாதுகாத்தல்

3032/ ’12

கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    ‘எகாவா’ எனும் மூலிகைத் தாவரத்தின் பதிலீட்டுத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகின்றதும் இலங்கைக்கே உரித்தான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதும் உலகத்தில் அழிவுற்று வருகின்றதுமான தாவர இனத்திற்குச் சொந்தமான ‘வல்லாபட்டா” (Gyrinops walla) தாவரத்தின் வெட்டுமரத் துண்டுகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் கள்ளக்கடத்தல் பற்றி அவர் அறிவாரா?

(ஆ) (i) ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் கலவான வெம்மியகொட (சிங்கராஜ வனத்திற்கு அருகாமையிலுள்ள) பிரதேசத்தில் எத்தனை கிலோகிராம் ‘வல்லாபட்டா’ தடிகள் கைப்பற்றப்பட்டன என்பதையும்;

(ii) மேற்படி ஒரு கிலோகிராம் வெட்டுமரத் துண்டுக்கு கள்ளக்கடத்தல்காரர்கள் செலுத்தியுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

(iii) உலக சந்தையில் ஒரு கிலோகிராம் “வல்லாபட்டா” எத்தனை ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) “வல்லாபட்டா” வெட்டுமரக் கள்ளக்கடத்திலின் பின்னணியிலுள்ள கள்ளக்கடத்தல்காரர்கள் யாவர் என்பதையும்;

(v) குறித்த கள்ளக்கடத்தல்காரர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனரா என்பதையும்;

(vi) இவர்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) “வல்லாபட்டா” எனப்படும் மூலிகைத் தாவரத்தைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-29

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු අනුර ප්‍රියදර්ශන යාපා මහතා (පරිසර අමාත්‍යතුමා)

(மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல் அமைச்சர்)

(The Hon. Anura Priyadharshana Yapa - Minister of Environment)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)       ඔව්. 2012.07.14 දින රත්නපුර දිසා වන කාර්යාලය යටතේ පවතින කලවාන අඩවි වන නිලධාරි කාර්යාලයේ වන නිලධාරින් පිරිසක් විසින් කලවාන බම්බියගොඩ ප්‍රදේශයේ නිවසක් වටලා එහි තිබූ වල්ලපට්ටා දැව කැබැලි තොගයක් හා එහි සිටි පුද්ගලයන් දෙදෙනෙක් අත්අඩංගුවට ගෙන ඇත.

(ආ) (i) අත් අඩංගුවට ගෙන ඇති කැබැලි ප්‍රමාණය කිලෝග්‍රෑම් 10ක් පමණ වේ.

(ii) නොදනී.

(iii) ලෝක වෙළෙඳ පොළෙහි මෙම දැවවලින් ලබා ගන්නා රෙසින් කිලෝග්‍රෑමයක් සඳහා රුපියල් ලක්ෂයක පමණ මුදලක් ලැබෙන බව වාර්තා වී ඇතත්, එහි වටිනාකම වෙනස් විය හැක.

(iv) මෙතෙක් නිශ්චිතව අනාවරණය වී නැත.

(v) දැව එකතු කරමින් සිටි දෙදෙනා (ශ්‍රී ලාංකිකයකු හා ඉන්දියානු ජාතිකයකු) දැනට අත් අඩංගුවට ගෙන ඇත.

(vi) මූලික විමර්ශන කටයුතු පවත්වා අවසන් කර ඇති අතර, නීතිපති දෙපාර්තමේන්තුවේ සහාය ඇතිව 2012.11.28 දින අදාළ සැකකරුවන්ට විරුද්ධව නඩු පැවරීමට කටයුතු කර ඇත.

(ඇ) මෙම ශාකය ස්වභාවිකව වැඩෙන තෙක් කලාපීය හා අතර මැදි කලාපීය වනාන්තර සියල්ලම පාහේ මේ වන විට සංරක්ෂිත හා රක්ෂිත වනාන්තර වශයෙන් ප්‍රකාශයට පත් කොට වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව මඟින් විශේෂ ආරක්ෂාවක් සලසා ඇත. මෙම ශාකය අපනයනය නියාමනය කිරීම මඟින් අනවසරයෙන් මෙම ශාක ද්‍රව්‍ය අපනයනය වැළැක්වීමට කටයුතු කර ඇත. එසේම මෙම ශාකය වනාන්තරවලින් පරිබාහිරව වගාවක් වශයෙන් ප්‍රචලිත කිරීම සඳහා දැනට පර්යේෂණ සිදු කරමින් පවතී.

(ඈ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2012-11-29

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks