04

E   |   සි   |  

 திகதி: 2012-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

2957/2012: புலத்சிங்கள பிரதான தபால் அலுவலகம் : குறைபாடுகள்

2957/12

கௌரவ அகில விராஜ் காரியவஸம்,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      1982 ஆம் ஆண்டில் இருந்தே வெளிநாடுகளுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளக் கூடியவாறான முன்னேற்றகரமான தொடர்பாடல் முறைமையொன்றைக் கொண்டிருந்த புலத்சிங்கள பிரதான தபால் அலுவலகம் தற்போது மிகவும் சீர்குலைந்துள்ளதென்பதையும்;

(ii) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இற்றை வரை மேற்படி அலுவலகத்தில் எவ்விதமான மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

(iii) தற்போது அங்கே 11 உத்தியோகத்தர்களுக்கான  வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பிரதான தபால் அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற உப தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி பிரதான தபால் அலுவலகத்திலும் மேலே குறிப்பிடப்பட்ட உப தபால் அலுவலகங்களிலும்  கடமையாற்றுகின்ற மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) பிரதான தபால் அலுவகத்திலிருந்து மாத்திரம் சேவையைப் பெறுகின்ற சேவைபெறுனர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) புலத்சிங்கள பிரதான தபால் அலுவலகத்தை மறுசீரமைப்பதற்கும்;

(ii) அதில் நிலவுகின்ற குறைபாடுகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கும்

நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-26

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

தபால் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ජීවන් කුමාරණතුංග මහතා (තැපැල් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ஜீவன் குமாரணதுங்க - தபால் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Jeewan Kumaranatunga - Minister of Postal Services)

(අ) (i)       ඔව්. බුලත්සිංහල තැපැල් කාර්යාල ගොඩනැඟිල්ලේ අලුත්වැඩියා කළ යුතු අංශවල සුළු හා හදිසි අලුත්වැඩියා කටයුතු සිදු කර ඇත.

(ii) ආරම්භ කළ වර්ෂයෙන් පසු කීප වතාවක් ගොඩනැඟිල්ලේ අලුත්වැඩියා කටයුතු සිදු කර ඇත.

(iii) මෙම කාර්යාලයේ නිලධාරි පුරප්පාඩු නැත.

(ආ) (i) උපතැපැල් කාර්යාල 07කි. ලිපි බෙදීම් සහිත කාර්යාල 05ක් හා ලිපි බෙදීම් රහිත කාර්යාල 02ක් වශයෙනි.

(ii) තැපැල් ස්ථානාධිපති (ඒ.තැ.සේ. "ආ" I "අ")            01

දෙවෙනි පෙළ තැපැල් ස්ථානාධිපති                                        02

             (ඒ.තැ.සේ. "ආ" I "ආ")  උපතැපැල් ස්ථානාධිපති   07

නිල ඇඳුම් කාර්ය මණ්ඩලය -(ඒ.තැ.සේ. "ඇ" I)   14

නිල ඇඳුම් කාර්ය මණ්ඩලය - (ඒ.තැ.සේ. "ඇ" II)    02

නිල ඇඳුම් කාර්ය මණ්ඩලය - (ඒ.තැ.සේ. "ඇ" III)   02

එකතුව   28

(iii)   දළ වශයෙන් 63,000ක් පමණ.

(ඇ) (i) ඔව්. 2013 වසරේ සම්පූර්ණ අලුත්වැඩියාවක් සඳහා ප්‍රතිපාදන වෙන් කරවා ගැනීමට කටයුතු කර ඇත.

(ii) සම්පූර්ණ අලුත්වැඩියාවෙන් පසු මෙම තත්ත්වය මඟ හැරී යන අතර, මේ පිළිබඳව නිරන්තරයෙන්ම පසු විපරම් සිදු කරනු ඇත.

(ඈ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-11-26

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ ஜீவன் குமாரணதுங்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks