04

E   |   සි   |  

 திகதி: 2012-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2917/2012: நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பான நடைமுறைச் சட்டம்: விதிப்பு

2917/ ’12

கெளரவ அஜித் பி. பெரேரா,—  நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பில் இலங்கையில் அமுலிலுள்ள நடைமுறைச் சட்டமொன்று கிடையாதென்பதையும்;

          (ii)     இலங்கையினுள் நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பாக நடைமுறைச் சட்டமொன்று விதிக்கப்படல் வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவினால் “ரொனீ பர்னாந்து” வழக்கில் விதப்புரை செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பான நடைமுறைச்சட்டமூலம் ஒன்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு நீதி அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இலங்கையினுள் நீதிமன்றத்தை அவமதித்தல் தொடர்பாக நடைமுறைச்சட்டமொன்று விரைவிலேயே விதிக்கப்படல் வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாராவென்பதையும்;

(ii) ஆமெனில், அதனோடு தொடர்புடைய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-23

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු රවුෆ් හකීම් මහතා (අධිකරණ අමාත්‍යතුමා)

(மாண்புமிகு றவுப் ஹகீம் - நீதி அமைச்சர்)

(The Hon. Rauff Hakeem - Minister of Justice)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේය.

(අ)          (i)       ශ්‍රී ලංකාව තුළ දැනට අධිකරණයට අපහාස කිරීම පිළිබඳ කාර්ය පටිපාටික නීතියක් පවතී. සිවිල් නඩු විධාන සංග්‍රහයේ 65 (LXV) පරිච්ඡේදයේ අධිකරණයට අපහාස කිරීම පිළිබඳ ලඝු කාර්ය පටිපාටිය පිළිබඳ විධිවිධාන යොදවා ඇත.

(ii) ඔව්.

(iii) ඔව්.

(ආ)  (i)  ඔව්. දැනට මේ සම්බන්ධයෙන් පවතින සිවිල් නඩුවිධාන සංග්‍රහයේ විධිවිධාන ඇතත්, සෑම අධිකරණයකටම අදාළ කර ගත හැකි වන පරිපූර්ණ නීතියක් සැකසීම වඩාත් සුදුසු යයි හැ‍ඟේ.

(ii) මේ සම්බන්ධයෙන් දැනට ශ්‍රී ලංකා නීතිඥ සංගමය සහ ශ්‍රී ලංකා නීති කොමිෂන් සභාව විසින් කෙටුම්පත් දෙකක් සකස් කර අධිකරණ අමාත්‍යාංශයේ අවධානය පිණිස යොමු කර ඇත. එම පනත් දෙක අධ්‍යයනය කිරීමෙන් සහ අදාළ විවිධ ක්ෂේත්‍රයන් සමඟ සාකච්ඡා කිරීමෙන් අනතුරුව කෙටුම්පත් සකස් කර පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීමට බලාපොරොත්තු වේ.

(ඇ)  අදාළ නොවේ.

 

பதில் தேதி

2013-02-19

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks