logo

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2139/2026: Strategy for the Prevention and Control of Rabies

2139/2026
கௌரவ தினேஷ் ஹேமந்த,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2025 ஆம் ஆண்டில் நாய்க்கடி காரணமாக நீர்வெறுப்பு நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி ஆண்டில் நீர்வெறுப்பு நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தடுப்பூசியேற்றல் நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ள நிதித்தொகை யாதென்பதையும்;
(iii) மேற்படி ஆண்டில் நாய்களை மலடாக்குவதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி யாதென்பதையும்;
(iv) அந்நிதியைப் பயன்படுத்தி மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தப்பட்ட தெரு நாய்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) நாய்களை மலடாக்குவதற்கான வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி யாதென்பதையும்;
(vi) அந்நிதியைப் பயன்படுத்தி 2026ஆம் ஆண்டில் இதுவரை மலட்டுத்தன்மைக்கு உட்படுத்தப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vii) அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் நாய்களை மலடாக்குவதற்கான வேலைத்திட்டத்தின் தன்மை குறித்து சிறு விளக்கத்தை தர முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-19

கேட்டவர்

கௌரவ தினேஷ் ஹேமந்த, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks