E   |   සි   |  

 திகதி: 2026-08-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

2108/2026: Construction of Housing projects in Rathnapura District

2108/2026
கௌரவ சுனில் றாஜபக்ஷ,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் சொந்தமாக இருந்த காணிகளைக் கையகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, கருத்திட்ட வாரியாக வெவ்வேறாக யாது;
(iii) ஒவ்வொரு கருத்திட்டத்தின் கீழும் வீடுகளுக்கும் காணிகளுக்கும் உறுதிகள் வழங்கப்பட்டுள்ள அத்துடன் வழங்கப்படாதுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iv) இதுவரை உறுதிகள் வழங்கப்படாதுள்ள பயனாளிகளுக்கு உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-18

கேட்டவர்

கௌரவ சுனில் றாஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks