பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2054/2026
கௌரவ சட்டத்தரணி சரத் குமார,— கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தின் வருடாந்த நன்னீர் மீன் உற்பத்தி எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி உற்பத்திக்காகப் பங்களிப்புச் செய்யும் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி மாவட்டத்தில் நன்னீர் மீன் உற்பத்திக்காக இனப்பெருக்க நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி நிலையங்கள் யாவையென்பதையும்;
(v) மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவின், அளுகல்கே கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 'முத்துகண்டிய நன்னீர் மீன் இனப்பெருக்க நிலையத்தின்' மதிப்பீட்டுச் செலவு எவ்வளவென்பதையும்;
(vi) மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் நன்னீர் மீன் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான இனப்பெருக்க நிலையங்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்குமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இங்கினியாகலையில் அமைந்திருக்கும் சேனநாயக்க சமுத்திரத்திலுள்ள மீன்பிடி இறங்குதுறைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நீர்த்தேக்கத்தின் பதுலுவெல பிரதேசத்தில் மீன்பிடி இறங்குதுறை ஒன்றை ஆரம்பிப்பதற்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-04
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சரத் குமார, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks