E   |   සි   |  

 திகதி: 2026-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1824/2026: மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள்: வட மாகாணம்

1824/2026
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு பெறக்கூடியவாறு வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் புனர்வாழ்வு நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், எந்தெந்த மாவட்டங்களில் இந்நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
(iii) தற்போது மேற்படி நிலையங்கள் ஊடாக சேவைகள் வழங்கப்படுகின்றனவா என்பதையும்;
(iv) ஆமெனில், சேவை வழங்கப்படுகின்ற மாவட்டங்கள் யாவை என்பதையும்;
(v) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி நிலையங்களை செயற்படக்கூடிய நிலைக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்க்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் ஆங்கில மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-23

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks