E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1493/ 2025 - கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1493/2025
      கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 1989.07.11 ஆம் திகதிய, 566/5 இலக்க வர்த்தமானி அறிவித்திலின் பிரகாரம், பொல்பிதிகம பிரதேச செயலக பிரிவில், வனசீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (ii) அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டபோது அக்காணிகளில் இருப்பாட்சிக் காணிகள், வதிவிடக் காணிகள் மற்றும் அரசாங்க அளிப்புப் பத்திர காணிகள் உள்ளடங்கியிருந்தனவா என்பதையும்;
      (iii) அத்தகைய காணிகள் நிள அளவை செய்யப்பட்டு அடையாளங் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iv) ஹக்வட்டுனாவ நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க ஒதுக்கங்கள் நில அளவை செய்யப்பட்டு எல்லைகள் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் மேற்படி வனசீவராசிகள் வலயத்திற்கு பாதைகள், மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (ii) இந்த வலயத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் விகாரைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
      (iii) ஹேரத்கம வனப்பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்களினால் அரச காணிகள் (ஆட்சி மீளப் பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (iv) தனி நபர்கள் இருப்பாட்சி கொண்டுள்ள / வதிகின்ற காணிகளை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-14

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks