E   |   සි   |  

 திகதி: 2025-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1462/2025: Estimate for the reconstruction of Kaluthara DIstrict Sports Complex

1462/2025
கௌரவ அஜித் பி. பெரேரா,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்பதற்கு,—
(அ) (i) பண்டாரகமவில் அமைந்துள்ள களுத்துறை மாவட்ட விளையாட்டுக் கட்டடத் தொகுதியின் (முன்னாள் ராஜா சமரநாயக்க விளையாட்டரங்கு) பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ் விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) அதற்கென மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி விளையாட்டுக் கட்டடத் தொகுதியின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2025 ஆம் ஆண்டில் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;
(v) மேற்படி மைதானத்தில் உள்ள 400 மீட்டர் ஓடுபாதையில் சுமார் 100 மீட்டர் நீளமான பகுதியில் மற்றும் மைதானத்தின் மத்தியில் பல பகுதிகளில் புற்கள் காய்ந்து கிரவல் மண் வெளிப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(vi) அவ்வாறாயின், அதனை மீளமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
(vii) மைதானத்தினுள் மழை நீர் தேங்கி நிற்பதைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks