E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1461/ 2025 - கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1461/2025
      கௌரவ அஜித் பி. பெரேரா,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப் படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (ii) மேற்படி சட்டத்தை வலுவூட்டுவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      (iii) மேற்படி சட்டத்தின் மூலம் இலங்கைப் பிரசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மேலும் வலுவூட்டுவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள சட்டரீதியான திருத்தங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மேன்முறையீடுகளின் எண்ணிக்கையும் அவற்றில் ஆணைக்குழுவினால் தீர்க்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளின் எண்ணிக்கையும் ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
      (ii) மேற்படி மேன்முறையீடுகளில் இது வரையில் விசாரணை செய்யப்பட்டு நிறைவு செய்ய முடியாதுபோன மேன்முறையீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-23

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks