04

E   |   සි   |  

 திகதி: 2025-11-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

1315/2025: பூந்தோட்டத்திலுள்ள கைத்தொழில் பேட்டையிலுள்ள காணித் துண்டுகள்: தற்போதைய நிலை

1315/2025
கௌரவ கே.காதர் மஸ்தான்,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் 1458 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு கைத்தொழில் பேட்டை உள்ளது என்பதையும்;
(ii) அதில் ஒரு சில காணித் துண்டுகள் காடாக மாறியுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கைத்தொழில் பேட்டையில் உள்ள மொத்தக் காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி காணித் துண்டுகளில் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் இதுவரை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படாதுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
(iii) தற்போது தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் உரிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா;
(iv) தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பயன்படுத்தப்படாதுள்ள காணித் துண்டுகளை, பிற தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க முடியுமா;
(v) ஆமெனில், அவ்வாறு வழங்கக்கூடிய காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாது;
(vi) தமது நிதியைப் பயன்படுத்தி, மேற்படி கைத்தொழில் பேட்டையினால் இறுதியாக அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை;
(vii) மேற்படி கைத்தொழில் பேட்டை உச்சளவு ஆற்றலுடன் இயங்கி வருகிறதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-11

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-11

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks