E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1308/ 2025 - கௌரவ சந்தன சூரியஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1308/2025
      கௌரவ சந்தன சூரியஆரச்சி,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அவிசாவளை நகருக்கு அண்மித்ததாக தொல்பொருளியல் திணைக்களத்துக்குச் சொந்தமான அருங்காட்சியகமொன்று உள்ளதை அறிவாரா என்பதையும்;
      (ii) அது நிர்மாணிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
      (iii) அதற்காக செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;
      (iv) அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவி வாரியாக வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
      (v) அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணி அரசாங்கத்துக்குரிய காணியா என்பதையும்;
      (vi) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி அருங்காட்சியகத்துக்குச் சொந்தமான அருங்காட்சிப் பொருட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
      (ii) மேற்படி அருங்காட்சிப் பொருட்கள் எந்தெந்த காலத்துக்குரியவை என்பதையும்;
      (iii) மேற்படி அருங்காட்சியகம் வருமானம் ஈட்டுகின்றதா என்பதையும்;
      (iv) ஆமெனில், திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஈட்டப்பட்ட வருமானம் ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ சந்தன சூரியஆரச்சி, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks