E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1282/ 2025 - கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1282/2025
      கௌரவ தனுஷ்க ரங்கனாத்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) களுத்துறை மாவட்டத்தில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான சகல காணிகளும் திட்டவட்டமாக வெவ்வேறாக அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (ii) ஆமெனில், அவற்றுள் தற்பொழுது பயன்படுத்தப்படாத, எனினும் 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்திற்கமைய பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடிய இயலுமையுள்ள காணிகளின் அளவு மற்றும் அவற்றின் தற்போதைய உரித்தின் தன்மை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிற்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
      (iii) மேற்படி காணிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) (i) களுத்துறை மாவட்டத்தில், ஆணைக்குழுவிற்கு உரித்தான சகல காணிகளுக்கும் உரித்துப் பத்திரங்கள் மற்றும் வரைபடங்கள் (plans) வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (ii) ஆமெனில், அவற்றின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு என்பதையும்;
      (iii) காணியற்ற அல்லது மீளக் குடியமர்த்தும் நபர்களுக்கு ஆணைக்குழுவின் காணிகளை விடுவிக்க முடியுமா என்பதையும்;
      (iv) ஆமெனில், அதற்குரியதான நடைமுறை யாதென்பதையும்;
      (v) குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் காணிகள், குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லையெனில், மீள கையகப்படுத்த முடியுமா என்பதையும்;
      அவர் குறிப்பிடுவாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks