E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1120/ 2025 - கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1120/2025
      கௌரவ ரவீந்திர பண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றலை விருத்தி செய்வதற்காக 1999 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) இவர்களின் பட்டதாரி பயிலுநர் நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;
      (iii) அத்தகைய நிரந்தரமாக்கலுக்கான அறிவுறுத்தல்களை/சுற்றறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
      (iv) அதன்போது பின்பற்றப்பட்டுள்ள வழிமுறை யாது என்பதையும்;
      (v) அத்தகைய அறிவுறுத்தல் கடிதத்தின்/சுற்றறிக்கையின் பிரதியைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
      அவர் அறிவிப்பாரா?
      (ஆ) (i) மத்திய அரசாங்கத்தின் ஒவ்வோர் நிரல் அமைச்சு, மாகாண அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் வாரியாகவும் அத்துடன் ஒவ்வொரு பதவிக்குரிய வகுதி வாரியாகவும் மேற்படி பட்டதாரிகளில் நிரந்தரமாக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;
      (ii) அத்தகைய பதவி வகுதி ஒவ்வொன்றுக்கும் ஏற்புடைய ஆரம்பச் சம்பளம், சம்பள அளவுத் திட்டம் மற்றும் சம்பளக் குறியீட்டு இலக்கம் வெவ்வேறாக யாது என்பதையும்;
      (iii) பணி நிரந்தரமாக்கப்பட்டதன் பின்னர் மேற்படி பட்டதாரிகளுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு/ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iv) அவ்வாறாயின், அவை எந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
      (v) அவற்றின் பிரதிகளைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
      (vi) சேவைப் பிரமாணக் குறிப்பு/ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தயாரிக்கப்படவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (vii) சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, பதவி உயர்வு வழங்கும் நடைமுறை யாது என்பதையும்;
      அவர் அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-08-20

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks