01

E   |   සි   |  

 திகதி: 2025-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1085/2025: வடக்குப் புகையிரத வீதியின் வவுனியா-கிளிநொச்சி வரையான பகுதி: சேதமடைந்துள்ள புகையிரதக் கடவைகள்

1085/2025
கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடக்குப் புகையிரத வீதியின் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியிலுள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்த முடியாதவகையில் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளன என்பதையும்;
(ii) குறிப்பாக வவுனியா, புளியங்குளம் பிரதேசத்திலுள்ள புகையிரதக் கடவைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன என்பதையும்;
(iii) பெரும்பாலான புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்றவையாக காணப்படுவதுடன் அவற்றினூடாகப் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அமைச்சின் பொறுப்பென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்ளவாரா?
(ஆ) ஆமெனில், மேற்படி பிரச்சினை தொடர்பில் வழங்கப்படும் தீர்வுகள் யாவையென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-10

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks