E   |   සි   |  

 திகதி: 2025-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0974/2025: சம்மாந்துறை, தொப்பிக்குடா பிரதான கால்வாய்: புனரமைப்பு

974/2025
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) நீர்ப்பாசனத் திணைக்களத்தின், சம்மாந்துறை நீர்ப்பாசன அலுவலகத்தினூடாக பராமரிக்கப்படுகின்ற வலது கரை பிரதான கால்வாயில் உள்ள 'தொப்பிக்குடா' எனும் பிரதான கால்வாய் நிரம்பி வழியும் காலங்களில் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயற் காணிகள் நீரில் மூழ்குவதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி கால்வாயை நிரந்தரமாகப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை நீர்ப்பாசனத் திணைக்களம் ஒதுக்கியுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி ஒதுக்கீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி கால்வாயின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்குத் தேவையான காலப்பகுதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-11

கேட்டவர்

கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-11

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks