01

E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0972/2025: யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பிரதேச வைத்தியசாலைகள்: விபரம்

1111/2025
கௌரவ துரைராசா ரவிகரன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் மற்றும் பெண் நோயாளர் விடுதிகளுக்கென நிரந்தரக் கட்டிடமொன்று இல்லை என்பதுடன், மேற்படி விடுதிகள் தற்காலிக கட்டிடங்களிலேயே பேணிவரப்படுகின்றன என்பதையும்;
(ii) இந்திய அரசின் உதவியின் கீழ் அவ்விடுதிகளுக்காக நிரந்தர கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக 2017-2018 காலப்பகுதியில் திட்டமிடல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதையும்;
(iii) 2024 ஆம் ஆண்டு இதற்கான மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இதுவரை மேற்படி கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
(ii) மேற்படி திட்டம் தொடர்ந்தும் செல்லுபடியானதாக இருப்பின், மேற்படி கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
(iii) மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பது இடைநிறுத்தப்பட்டிருப்பின் அல்லது இரத்துச் செய்யப்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-09-23

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks