பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
953/2025
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க பிரதேச வைத்தியசாலையொன்றில் இருக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிக்கமைவாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்துள்ள அரசாங்க பிரதேச வைத்தியசாலைகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி வைத்தியசாலைகளில் சேவையாற்றுவதற்கு நிரந்தர நியமனம் பெற்ற தாதியர்கள் இன்றளவில் குறித்த வைத்தியசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ளனரா என்பதையும்;
(v) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vi) அதற்காக வழங்கப்படும் தீர்வுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், தரமுயர்த்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iii) வைத்தியசாலையின் வகைப்படுத்தலுக்கு அமைவாக மேற்படி வைத்தியசாலையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இன்றளவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிக்கமைவாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-07-11
கேட்டவர்
கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-07-11
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks