E   |   සි   |  

 திகதி: 2025-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0923/2025: இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம்: விபரம்

923/2025
கௌரவ சுனில் ரத்னசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) நிறுவுவதற்கு அப்போதைய வர்த்தக அமைச்சு நிதி வசதி வழங்கியுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த நிதித்தொகை யாது என்பதையும்;
(iii) அந்த நிறுவனத்தில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) 2020 தொடக்கம் 2024 வரையில் மேற்படி நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;
(v) தற்போது மேற்படி நிறுவனம் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்குமாயின், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(vi) இந் நிறுவனத்தை நட்டமடையும் நிலைக்கு உள்ளாக்கிய முகாமைத்துவத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-11

கேட்டவர்

கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-11

பதில் அளித்தார்

கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks