E   |   සි   |  

 திகதி: 2025-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0916/2025: கனேவத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள LRC காணி: முன்னோடிக் கருத்திட்டத்திற்காக கையகப்படுத்தல்

916/2025
கௌரவ சந்தன தென்னகோன்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) குருணாகலை, கனேவத்த பிரதேச செயலாளர் பிரிவின், இலக்கம் 472, பொத்துவில கிராம அலுவலர் பிரிவில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 76 ஏக்கர் காணி, கமத்தொழில் அமைச்சின் முன்னோடிக் கருத்திட்டமொன்றுக்காக 1999 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டுள்ளதை அறிவாரா;
(ii) அதற்காக ஆணைக்குழுவுக்கு செலுத்தப்பட்ட இழப்பீடு, வட்டி மற்றும் மொத்த தொகை தனித்தனியே எவ்வளவு;
(iii) மேற்படி காணியை கையகப்படுத்துவதற்கான கோரிக்கை யாரால் முன்வைக்கப்பட்டது;
(iv) மேற்படி காணி கையகப்படுத்தப்பட்டதன் பின்னர் இருப்பாட்சி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது;
(v) மேற்படி விவசாய உற்பத்திகளுக்கான முன்னோடிக் கருத்திட்டம் யாது;
(vi) மேற்படி கருத்திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை முதலீட்டுச் சபை பாரியளவில் மூலதன செலவினத்தை செய்துள்ளதை அறிவாரா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) கையகப்படுத்தப்பட்ட காணி, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் 'ஹிரியால கமநலக் கம்பனி' க்கு 30 வருடங்களுக்கு பகுதியளவிலான குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதை அறிவாரா;
(ii) மேற்படி கம்பனி செலுத்த வேண்டிய வருடாந்த குத்தகைத் தொகை எவ்வளவு;
(iii) மேற்படி கம்பனியின் தலைவர் யார்;
(iv) இதன்போது அரச நிதி/சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வாரா;
(v) இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-19

கேட்டவர்

கௌரவ சந்தன தென்னகோன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-19

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks