logo

02

E   |   සි   |  

 திகதி: 2025-05-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0873/2025: 2015 தொடக்கம் 2024, செப்ரெம்பர் வரை அச்சிடப்பட்ட பணம்: விபரம்

873/2025
கௌரவ ரவீந்திர பண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டில், இலங்கையில் சனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்ட திகதி வரை அச்சிடப்பட்ட பணத்தின் பெறுமதி ஒவ்வோர் ஆண்டுவாரியாக தனித்தனியே ரூபாவாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியில் ஒவ்வொரு நிதியமைச்சரின் கீழும் அச்சிடப்பட்ட பணத்தின் பெறுமதி தனித்தனியே ரூபாவாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி காலப்பகுதியில் ஒவ்வொரு சனாதிபதியின் கீழும் அச்சிடப்பட்ட பணத்தின் பெறுமதி தனித்தனியே ரூபாவாக எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி காலப்பகுதிக்குரிய ஏதேனுமொரு காலத்தில் கட்டுப்பாடின்றி பணம் அச்சிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) கட்டுப்பாடின்றி பணத்தை அச்சிடுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-08

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-08

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks