E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0859/ 2025 - கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 859/2025
      கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அரசாங்க காணிகளின் எண்ணிக்கை பிரதேச செயலகப் பிரிவு வாரியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
      (ii) ஹொரொவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவின், 153 ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொடின்னேவ கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசாங்க காணி அனுமதியின்றி துப்புரவு செய்யப்பட்டு அதில் பயிரிடப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
      (iii) ஆமெனில், அந்த காணியை துப்புரவு செய்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் யாவர் என்பதையும்;
      (iv) மேற்படி நபர்களுக்கு அதற்காக சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பதையும்;
      (v) இவர்கள் உர மானியத்தை பெற்றுக்கொண்டுள்ளார்களா என்பதையும்;
      (vi) ஆமெனில், மேற்படி உர மானியத்தின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-08-21

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks