பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
847/2025
கௌரவ நிஷாந்த பெரேரா,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, அந்த ஆணைக்குழுவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விசேட சலுகைகளின் கீழ் காணிகளைக் கையுதிர்த்துள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ்வாறு காணிகள் கையுதிர்க்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றினை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு விசேட சலுகைகளின் கீழ் காணிகள் கையுதிர்க்கப்பட்டதன் சட்ட ரீதியான அடிப்படை யாதென்பதையும்;
(v) அவ்வாறு கையுதிர்க்கப்பட்ட காணிகளை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்கோ அல்லது கைமாற்றம் செய்வதற்கோ இயலுமையுள்ளதா என்பதையும்;
(vi) விசேட சலுகைகளின் கீழ் கிடைக்கப்பெற்ற காணிகளுள் வேறு தரப்பினருக்கு விற்பனை அல்லது கைமாற்றம் செய்யப்பட்டுள்ள காணிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(vii) மேற்படி காணிகளை வேறு தரப்பினருக்கு விற்பனை அல்லது கைமாற்றம் செய்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-09
கேட்டவர்
கௌரவ நிஷாந்த பெரேரா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-17
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks