பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
845/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வடமத்திய மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான வரையறுக்கப்பட்ட பல்நோக்குச் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிச் சங்கங்கள் மற்றும் மேற்படி வங்கிகளின் கிளைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி கூட்டுறவுச் சங்கங்களையும் வங்கிச் சங்கங்களையும் தாபிப்பதில் பின்பற்றப்பட்டுள்ள முறைமை யாது என்பதையும்;
அவர் அறிவிப்பாரா?
(ஆ) (i) வரையறுக்கப்பட்ட வட மத்திய மாகாண சௌபாக்கியா கூட்டுறவுச் சங்கம் (SCD) மற்றும் வரையறுக்கப்பட்ட அனுராதபுர மாவட்ட கிராமிய மூலதன அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் (RCD) என்ற பெயரில் இரண்டு சங்கங்கள் இருப்பதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு சங்கமும் ஆரம்பிக்கப்பட்ட திகதி, பதிவிலக்கம் மற்றும் முகவரி என்பன வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) மேற்படி முகவரிகளின் தற்போதைய உரிமையாளர்கள் யாவர் என்பதையும்;
(iv) மேற்படி சங்கங்களைத் தாபிக்கின்றபோது ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, மற்றும் மூன்றாம் நிலைக் கட்டமைப்பு மற்றும் முறைமைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) இன்றேல், பின்பற்றப்பட்டுள்ள முறைமை யாது என்பதையும்;
(vi) மேற்படி சங்கங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்கின்ற போது வடமத்திய மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
(vii) இன்றேல், அவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முறைமை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-07-08
கேட்டவர்
கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-07-08
பதில் அளித்தார்
கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks