பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0816/2025: தெய்யந்தர நகர அபிவிருத்தி: முன்மொழிவுகள்

816/2025
கௌரவ அஜந்த கம்மெத்தெகே,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தெய்யந்தர நகரை அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி திட்டத்தில் உள்ள முன்மொழிவுகளில் இன்றளவில் நடைமுறைப்படுத்தப்பட்டவற்றின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) எஞ்சியுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி திட்டத்தின் படி தெய்யந்தர ஆரம்ப பாடசாலையை தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறுவனம்/ நபரின் விபரம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ அஜந்த கம்மெத்தெகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks