logo

E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0795/2025: சமுதாய நீர் வழங்கல் நிலையங்களை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொறுப்பேற்றல்: நடைமுறை

795/2025
கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சமுதாய நீர்வழங்கல் நிலையங்களை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், இதற்குரிய வழிமுறை யாதென்பதையும்;
(iii) பொறுப்பேற்றுக்கொள்ளப்படும் சமுதாய நீர்வழங்கல் நிலையங்களில் உள்ள சகல ஆதனங்களும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு பொறுப்பேற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) முறையான கணக்காய்வு மேற்கொள்ளப்படாது தெஹிஅத்தகண்டிய, நவ மெதகம, சமுதாய நீர்வழங்கல் பிரிவு சபையினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி பிரிவினை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks