E   |   සි   |  

 திகதி: 2025-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0716/2025: அஸ்வெசும பயனாளிகள்: களுத்துறை மாவட்டம்

716/2025
கௌரவ தனுஷ்க ரங்கனாத்,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) களுத்துறை மாவட்டத்திலுள்ள அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி எண்ணிக்கையானது அஸ்வெசும பயனாளிகளின் வகைப்படுத்தலுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) களுத்துறை மாவட்டத்திலுள்ள அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதியின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கிடைக்கப்பெற வேண்டிய எனினும் இதுவரையில் குறித்த நலன்புரி நன்மைகள் கிடைக்கப்பெறாத அகலவத்தை தேர்தல் தொகுதியில் வாழ்கின்ற குடும்பங்கள் தொடர்பில் அறிந்துள்ளாரா என்பதையும்;
(v) அவர்களுக்காக எதிர்காலத்தில் சலுகை அடிப்படையிலான ஏதேனும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) குறைந்த வருமானம் பெறுபவர்களைத் தெரிவு செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
(ii) அஸ்வெசும பயனாளிகள் தெரிவின்போது பின்பற்றப்பட்டுள்ள முறையியல் தொடர்பில் திருப்தியடைய முடியுமா என்பதையும்;
(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-11

கேட்டவர்

கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-11

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks