பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
715/2025
கௌரவ தனுஷ்க ரங்கநாத்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குக்குலே கங்கை மின் உற்பத்தி நிலைய நிர்மாணிப்பு கருத்திட்டத்திற்கான காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதி யாது என்பதையும்;
(ii) அந்த கருத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட காணியின் அளவு யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் நுழைவுப் பாதை குறித்து அறிவாரா என்பதையும்;
(ii) அந்த நுழைவுப் பாதையின் ஆரம்ப இடம் மற்றும் முடிவிடம் யாது என்பதையும்;
(iii) மேற்படி நுழைவுப் பாதையில் வீதி இலக்கம் 437 இற்கான பேருந்து சேவையில் உள்ளதுடன், அந்தப் பாதையானது பொதுப் போக்குவரத்துப் பாதையாக மாறியுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iv) அந்தப் பாதையில் குக்குலே கங்கை மின் உற்பத்தி நிலையத்திற்குச் சொந்தமான பகுதியின் தூரம் யாது என்பதையும்;
(v) முறையாக பராமரிக்காததன் காரணமாக, அண்ணளவாக அந்த வீதிப் பகுதியின் சரிபாதியான பகுதி பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதை அறிவாரா என்பதையும்;
(vi) குறித்த வீதிப் பகுதியை முறையாக பராமரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(vii) இன்றேல், அந்தப் பாதை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-18
கேட்டவர்
கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-18
பதில் அளித்தார்
கௌரவ குமார ஜயகொடி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks