பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
668/2025
கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான டாக்டர் சத்தியமூர்த்தி தங்கமுத்து கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கத் துறையில் 170 பேரை தொழிலுக்கு அமர்த்தியுள்ளார் என்பதையும்;
(ii) இந்த ஊழியர்களுக்கு மாதாந்தம் 10000.00 ரூபாவிற்குக் குறைவான தொகை அவர்களின் 36 மாத தொழிற் காலத்தின் போது ஆகக்கூடுதலாக 05 மாத காலத்திற்கு மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) இவ்வாறான தொழில் நடைமுறைகள் இலங்கையின் தொழில் சட்டங்களை மீறியுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த ஊழியர்கள் அரசாங்கத் துறைக்கு நியமிக்கப்பட்ட அடிப்படையினையும்;
(ii) இந்த ஊழியர்களின் தற்போதைய தொழில் நிலைமையினையும்;
(iii) இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுத்திலான ஒரு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டும் டாக்டர் தங்கமுத்துவிற்கு எதிராக இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் ஏன் எடுக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-05
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா, பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-05
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks