பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
571/2025
கௌரவ கிட்ணன் செல்வராஜ்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கங்களால் குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் பெருந்தோட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாது பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதையும்;
(ii) 1987 ஆம் ஆண்டில் யுனிசெப் நிறுவனத்தினால் தோட்டப்புற குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) யுனிசெப் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டப்புற குடிநீர் விநியோகத் திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவை ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) அவை தற்போது செயற்படுகின்றனவா என்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு திட்டத்தினதும் தற்போதைய நிலைமை வெவ்வோறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கடந்த ஐந்து (05) வருடங்களில் பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) ஹல்தும்முல்லை பிரதேச செயலகப் பிரிவில் பூனாகலை, எல்.எல்.ஜீ. கெப்கடை புதிய வீடமைப்புத் திட்டத்துக்குரிய குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) அந்த குடிநீர் விநியோகத் திட்டத்தின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-20
கேட்டவர்
கௌரவ கிட்ணன் செல்வராஜ், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-20
பதில் அளித்தார்
கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks