E   |   සි   |  

 திகதி: 2025-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0457/2025: பெல்பொல இடமாறல் நிர்மாணம்: விபரம்

457/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இடமாறல்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நெடுஞ்சாலையில் கெலணிகம இடமாறலில் இருந்து தொடங்கொட இடமாறல் வரையாகவுள்ள தூரம் எவ்வளவென்பதையும்;
(iii) பெல்பொல இடமாறலை அமைப்பதற்காக தற்போது காணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், மேற்படி காணிகளுக்குச் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
(v) பெல்பொல இடமாறலை வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) அவ்வாறாயின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vii) அந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-20

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-20

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks