01

E   |   සි   |  

 திகதி: 2025-02-28   பதிலளிக்கப்பட்டவைகள் 

0426/2025: கிண்ணியாவிலுள்ள தேசிய இளைஞர் படையணிப் பயிற்சி நிலையம்: தற்போதைய நிலை

426/2025

கௌரவ இம்ரான் மகரூப்,— இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள, தேசிய இளைஞர் படையணிப் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிற்கமைவாக எத்தனை;

(ii) கிண்ணியா பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் அது வேறொரு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளதை அறிவாரா;

(iii) மேற்படி பயிற்சி நிலையம் மூடப்படுவதற்கான காரணங்கள் யாவை;

(iv) அதனை வேறொரு பிரதேசத்தில் நிறுவுவதற்கான காரணங்கள் யாவை;

(v) மேற்படி பயிற்சி நிலையத்தை மீளத்திறப்பதில் தடையேதும் உள்ளதா;

(vi) இன்றேல், மேற்படி பயிற்சி நிலையத்தை மீளத்திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா;

(vii) ஆமெனில், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-28

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-28

பதில் அளித்தார்

கௌரவ சுனில் குமார கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks